Home உலகம் அமெரிக்க எம்.பி.க்களின் பேச்சு குறித்து இம்ரான்கான் அதிருப்தி

அமெரிக்க எம்.பி.க்களின் பேச்சு குறித்து இம்ரான்கான் அதிருப்தி

by Jey

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்ததற்கு பாகிஸ்தான் மிகப்பெரும் விலை கொடுத்துள்ளது.”ஆனால் தலிபான்களுக்கு ஆதரவாக இருந்ததாக அமெரிக்க எம்.பி.,க்கள் பேசியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது,” என, பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

நம் அண்டை நாடான பாக்., பிரதமர் இம்ரான் கான், ‘ரஷ்யா டுடே’ என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டி:அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நேரத்தில் பாகிஸ்தான் மிகவும் பதற்றமான சூழ்நிலையில் இருந்தது. அந்த காலகட்டத்தில்தான் முஷாரப் ராணுவ புரட்சி வாயிலாக ஆட்சியை கைப்பற்றினார். முஷாரப் பாக்.,கில் தன் ஆட்சியை நடத்த அமெரிக்காவின் உதவியை நாடினார். அது தான் மிகப்பெரிய தவறு.மேலும் ரஷ்யாவுக்கு எதிராக முஜாஹிதீன்களை அமெரிக்கா வளர்த்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தது

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக தலிபான்கள் போராடுவதற்கு அமெரிக்காவின் விருப்பப்படிதான் தலிபான்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக பாகிஸ்தான் மிகப் பெரும் விலை கொடுத்துள்ளது. ஆனால் அமெரிக்க எம்.பி.,க்கள் பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாக பேசியிருப்பது மிகுந்த வேதனை ஏற்படுத்தியுள்ளது. எங்களை குறை கூறுவது நியாயமற்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

related posts