லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக தெரிவானதைத் தொடர்ந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.
கனடாவில் நேற்றைய தினம் 44ம் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் லிபரல் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.
எனினும் ட்ரூடோ அரசாங்கம் எதிர்பார்த்த பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
லிபரல் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து கனேடிய டொரின் பெறுமதி ஸ்திரமடைந்துள்ளதாகவும் இது பொருளாதார ரீதியில் நன்மையானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.