Home உலகம் தேனிகள் கொட்டியதில் பென்குயின்கள் ஊயிரிழப்பு

தேனிகள் கொட்டியதில் பென்குயின்கள் ஊயிரிழப்பு

by Jey

தென் ஆபிரிக்க தலைநகர் Cape நகரை அண்மித்து, தேனிகள் கொட்டியதில் அருகி வரும் பென்குயின்கள் உயிரிழந்துள்ள அரிய வகை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பத்தில் 63 பென்குயின்கள் உயிரிழந்துள்ளதாக தென் ஆபிரிக்க பறவை இன பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சிம்சன்ஸ்டவுன் (Simonstown) பிரதேசத்திலுள்ள கடற்கரையில் தேனிகள் கொட்டிய காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இந்த பென்குயின்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்திருந்த பென்குயின்களின் கண்களை சுற்றி தேனிகள் கொட்டியுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது மிகவும் அரிதான விடயம் என விலங்குகள் நல வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பென்குயின்களின் உடல்கள் காணப்பட்ட அதே இடத்திலேயே உயிரிழந்த சில தேனிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் டேவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.

related posts