பிரதமர் ஜஸ்ரின்ட் ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி மீண்டும் சிறுபான்மை அரசாங்கமொன்றை நிறுவ உள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற நாட்டின் 44ம் பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மொத்தமாக 157 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சி 121 ஆசனங்களையும், புளொக் கியூபிகோக்ஸ் கட்சி 31 ஆசனங்களையும், என்டிபி கட்சி 27 ஆசனங்களையும், கிறீன் கட்சி 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.
அதிகாரபூர்வ இறுதி முடிவுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி லிபரல் கட்சி மீண்டும் சிறுபான்மை அரசாங்கமொன்றை நிறுவ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொத்தமாக 338 ஆசனங்களைக் கொண்ட கனேடிய நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் 170 ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியினால் 157 ஆசனங்களையே கைப்பற்றிக்கொள்ள முடிந்தது.
கடந்த 2019ம் ஆண்டிலும் லிபரல் கட்சி இதேயளவு ஆசனங்களையே பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.