கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் சமஷ்டி அரசாங்கத்திடம் அல்பர்ட்டா மாகாண அரசாங்கம் உதவி கோரியுள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளுக்கு உதவுமாறு மாகாண அரசாங்கம், சமஷ்டி அரசாங்கத்திடம் அதிகாரபூர்வமாக கோரியுள்ளது என மாகாண உட்கட்டுமான அமைச்சர் Ric McIver தெரிவித்துள்ளார்.
சுகாதார வசதிகளை அதிகரிப்பதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அல்பர்ட்டா மாகாணத்திற்கு உதவ உள்ளதாக சமஷ்டி அரசாங்கம் தெரிவித்துள்ளது.