மீண்டும் ஒரு பொது முடக்கத்தை தவிர்ப்பதற்கான சிறந்த வாழியாக தடுப்பூசி சான்றிதழை அடையாளப்படுத்த முடியும் என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பங்குபற்றி உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் தற்காலிகமானவை என்ற போதிலும் அவற்றைப் பயன்படுத்தி கோவிட்டை கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகவும் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே கோவிட் தடுப்பூசி பயன்படுத்தப்படுவதாகவும், பின்னர் இந்த நடைமுறை கைவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றாரியோவில் 12 வயதுக்கும் மேற்பட்ட 85 வீதமானவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாத்திரை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.