Home கனடா அல்பர்ட்டா வைத்தியசாலைகள் கொள்ளளவு எல்லையை அண்மித்துள்ளது

அல்பர்ட்டா வைத்தியசாலைகள் கொள்ளளவு எல்லையை அண்மித்துள்ளது

by Jey

அல்பர்ட்டா வைத்தியசாலைகள் கொள்ளளவு எல்லையை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணத்தில் கோவிட் தொற்று உறுதியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றது.

மாகாணத்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் மிக மோசமான நிலைமை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதனால் வைத்தியசாலைகள் தனது கொள்ளளவில் 90 வீதத்தை அண்மித்துள்ளது.

வைத்தியசாலைகளின் சாதாரண சிகிச்சைப் பிரிவுகளைப் போன்றே தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் இயலுமையை நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் மாகாணத்திற்கு வெளியே விமானம் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

related posts