தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திலீபனின் நினைவிடத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை அஞ்சலி செலுத்த அனுமதிக்க முடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அஞ்சலி செய்ய முடியாது எனில் நீதிமன்றம் ஊடாக தடை வழங்கப்படும் அவ்வாறு தடை உத்தரவேதும் உண்டா என நாடாளுமன்ற உறுப்பினர் வினாவியுள்ளார்.
அவ்வாறான தடை உத்தரவு இல்லை என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் திலீபனின் நினைவு மேடைப் பகுதிக்குள் உட் செல்ல விடாதமையினால் வெளிப்புரத்தில் சூடம் ஏற்ற முற்பட்ட சமயம் சூடத்தை சப்பாத்துக் கால்களால் அனைத்த பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினரை இழுத்துச் சென்று வாகனத்திற்குள் தள்ளியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினருடன் இருந்த மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் உட்பட மேலும் இருவரையும் கைது செய்த பொலிசார் அனைவரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.