உலகின் செல்வந்தர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் கனடா முன்னணி பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் கனடாவில் ஏழு பில்லியன்களுக்கு அதிபதிகள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி கனடாவில் பில்லியன்களுக்கு அதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.
உலகில் அதிக பில்லியன்களுக்கு அதிபதிகளின் வரிசையில் கனடா 12ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய பில்லியன் அதிபதிகளின் மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டொலர்களை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது கடந்த ஆண்டை விடவும் 4.5 வீதம் அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகின்றது.
பில்லியன்களுக்கு அதிபதிகளின் முதல் பதினைந்து பேர் வரிசையில் ஏழு பேர் தொழில்நுட்பத்துறை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.