றொரன்டோவில் அல் கய்தா இயக்கம் குறித்த தகவல்களை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Kevin Omar Mohamed என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னர் விடுதலை செய்யப்பட்ட குறித்த நபரின் செல்லிடப்பேசியில் தீவிரவாத செயற்பாடுகள் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.