ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு கூட்டத்தில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு இன்று கூடியது. இதன்போதே மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
அத்துடன், சமையல் எரிவாயு, பால்மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கான பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.