சீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்த இரண்டு மைக்கல்களும் நாடு திரும்பியுள்ளனர்.
மிக நீண்ட காலமாக சீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்த மைக்கல் கோவிர்க் மற்றும் மைக்கல் ஸ்பாவோர் ஆகியோர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கனேடிய விமானப் படையின் பயணிகள் விமானமொன்றில் இரண்டு மைக்கல்களும் நாடு திரும்பியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
உளவுப் பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த இருவரையும் சீன அதிகாரிகள் சுமார் மூன்று ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சீனாவின் Huawei நிறுவனத்தின் நிதி நிறைவேற்று அதிகாரியான Meng Wanzhou வை நேற்றைய தினம் கனேடிய அரசாங்கம் விடுதலை செய்திருந்தது.
இந்த இருவரும் கல்கரியை வந்தடைந்தனர் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.