Home கனடா வதிவிடப் பாடசாலை துன்புறுத்தல்கள் குறித்து கத்தோலிக்க பேராயர்கள் மன்னிப்பு

வதிவிடப் பாடசாலை துன்புறுத்தல்கள் குறித்து கத்தோலிக்க பேராயர்கள் மன்னிப்பு

by Jey

வதிவிடப்பாடசாலை துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் கத்தோலிக்க பேராயர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

வதிவிடப் பாடசாலைகளில் பழங்குடியின சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் முதல் தடவையாக கத்தோலிக்க பேராயர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது கத்தோலிக்கச் சமூகத்தைச் சேர்ந்த சிலரினால் இழைக்கப்பட்ட பாரதூரமான துஸ்பிரயோகங்களுக்காக வருந்துவதாகவும் மன்னிப்பு கோருவதாகவும் கத்தோலிக்க பேராயர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

நிபந்தனை அற்ற அடிப்படையில் கனேடிய கத்தோலிக்க பேராயர்கள் இந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாப்பாண்டவருடன் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்திப்பு நடாத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்தை எட்டுவதற்கான முதன் கட்டமாக மன்னிப்பு கோருவதனை கருவதாக பேராயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

related posts