உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சில நாடுகள் பயங்கரவாதத்தை அரசியல் கேடயமாக பயன்படுத்துகிறது என மோடி பாக்.,மீது குற்றம் சாட்டினார்.
நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.,சபையின் 76 வது பொது கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலகம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மோசமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது.கொடிய கொரோனாவுக்கு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். எங்களது பன்முகத்தன்மை ஜனநாயகத்தின் வலிமையாக உள்ளது துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம்.
வலிமையான ஜனநாயகம்
இந்திய ஜனநாயகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய வங்கி கணக்கு 30 லட்சம் பேருக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு தரமான சுகாதார வசதிகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.பலருக்கு வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டு வீட்டின் உரிமையாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இந்தியா வளர்ச்சி அடையும் போது உலகமும் வளர்ச்சி அடைகிறது.இந்தியா சீர்திருத்தங்களை அடையும் போது ஒட்டுமொத்த உலகமும் மாற்றங்களை அடைகிறது.
இந்தியாவில் யுபிஐ மூலம் மாதந்தோறும் 3.50 லட்சம் கோடிக்கு மேல் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது எங்களின் ஜனநாயக வலிமையாக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நாடு முழுவதும் 6 லட்சம் கிராகமங்களை டிரோன்கள் மூலம் கண்காணித்து நிலங்களை அளந்து ஏழைகளுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சில நாடுகள் பயங்கரவாதத்தை அரசியல் கேடயமாக பயன்படுத்துகிறது பிற்போக்கு சிந்தனை அதனால் உருவாகும் பயங்கரவாதத்தை உலகநாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்பது அனைவரையும் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகள் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்.கடைக்கோடி மக்களுக்கும் திட்டங்கள் சென்றடையும் வகையில் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தடுப்பூசி தாயாரிப்பாளர்கள் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க முன் வர வேண்டும். ஏழைமக்களுக்கு வீடுகள் இலவசமருந்துகளைஇந்திய அரசு அளித்து வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.