சீனா Huawei நிறுவனத்தின் நிதி நிறைவேற்று அதிகாரி Meng Wanzhou கனடாவை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Meng Wanzhou வான்கூவார் விமான நிலையத்தின் ஊடாக விசேட விமானமொன்றின் மூலம் சீனா புறப்பட்டுச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
Meng Wanzhou ஐ நாடு கடத்துமாறு அமெரிக்கா விடுத்திருந்த கேரிரக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து, கனடா வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது.
மிக நீண்ட காலமாக Meng Wanzhou கனடாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பித்தக்கது.
இதன் காரணமாக சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையில் கடுமையான இராஜதந்திர முரண்பாட்டு நிலைமை நீடித்து வந்தது.