Home கனடா கத்தோலிக்க பேராயர்களின் மன்னிப்பு குறித்து பழங்குடியின தலைமைகள் கருத்து

கத்தோலிக்க பேராயர்களின் மன்னிப்பு குறித்து பழங்குடியின தலைமைகள் கருத்து

by Jey

கத்தோலிக்க பேராயர்களின் மன்னிப்பு கோரல் தொடர்பில் பழங்குடியின தலைமைகள் கருத்து வெளியிட்டுள்ளன.

கடந்த காலங்களில் பழங்குடியின சிறார்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கனேடிய கத்தோலிக்க பேராயர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தனர்.

எவ்வாறனினும் இந்த மன்னிப்பு கோரலை விடவும் திடமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது என பழங்குடியின பேரவையின் பிரதானி Chief RosAnne Archibald வலியுறுத்தியுள்ளார்.

பேராயர்களின் மன்னிப்பு கோரலை வரவேற்கின்ற போதிலும், இந்த அநீதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து சரியான விடயங்கள் எதனையும் குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அநீதிகள் தொடர்பில் புனித பாப்பாண்டவர் தனிப்பட்ட ரீதியில் மன்னிப்பு கோர வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

related posts