சீனாவில் மேலும் கனேடியர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட நாட்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த Michael Spavor மற்றும் Michael Kovrig ஆகியோர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் மேலும் பல கனேடியர்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுள்ளது.
இவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் நான்கு பேர் மரண தண்டனைக் கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Robert Schellenberg, Xu Weihong, Ye Jianhui மற்றும் Fan Wei ஆகியோருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நான்கு பேருக்கு எதிராகவும் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.