Home இந்தியா காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு

by Jey

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரை உடனடியாக வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமை வகித்தார். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பாக, அக்டோபர் மாதத்திற்கான நீர் பங்கீட்டையும் உடனே வழங்க கார்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிப்பதில்லை, எங்களுக்கு மாநிலத்திற்கு சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை எனவும் தமிழக அதிகாரிகள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மேகதாது ஆணை விவகாரமும் கூட்டத்தில் பேசப்பட்டது.

இதனையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் சார்பாக, முதலில் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதாவது 28 டிஎம்சி காவிரி நீரை உடனே திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேகதாது ஆணை விவகாரம் குறித்து அனைத்து மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே விவாதிக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

related posts