Home கனடா கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

by Jey

கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திவிரப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றினால் உயிரிழப்போர் மற்றும் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கையை வரையறுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்பர்ட்டாவின் முன்னாள் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் ஜேம்ஸ் டால்போட் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் டொக்டர் நொயல் கிப்னேய் ஆகியோர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மாகாணத்தின் புதிய சுகாதார அமைச்சர் ஜேசன் கோபிங்கிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 24 மணித்தியாலங்களில் அல்பர்ட்டாவில் 29 பேர் கோவிட் காரணமாக மரணிப்பதாகவும், தடுப்பூசி ஏற்றப்படாத கோவிட் உச்சத்திலிருந்த போதும் 35 பேர் நாளாந்தம் உயிரிழந்தனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

related posts