ஆப்கானிஸ்தானில் ஆண்கள் முகச்சவரம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முகச்சவரம் செய்வது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானதென தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய உத்தரவை மீறுவோருக்கு எதிராக தண்டனை வழங்கப்படுமென தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
சிகை திருத்தத்திற்கென வருகை தருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாதென முடி திருத்துனர்களுக்கும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினர் வெளியேற்றப்பட்டதையடுத்து அந்நாட்டில் தலிபான்கள் கடுமையான சட்டங்களை அமுல்ப்படுத்திவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.