கொரோனா வைரஸூக்கு சமமான வைரஸ் அடங்கிய வெளவால்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
லாவோஸ் விஞ்ஞானிகள் அவற்றை கண்டுப்பிடித்துள்ளனர். அதன் வைரஸ்கள் மனிதர்களுக்கு மத்தியில் பரவினால் மோசமான பாதிப்புகள் ஏற்படலாமென விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸூக்கு சமமான 3 வகையான வைரஸூகள் வெளவால்களின் உடலில் காணப்பட்டதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். வடக்கு லாவோஸில் வாழும் 645 வெளவால்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதன்போதே கொரோனா வைரஸூக்கு சமமான வைரஸ்கள் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது. இதேவேளை குறித்த வைரஸ் மனிதர்களுக்கு மத்தியில் பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.