மருத்துவ காரணிகளின் அடிப்படையில் கனேடியர்கள் விடுதலை செய்யப்பட்டதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மைக்கல் கோர்விக் மற்றும் மைக்கல் ஸ்பாவோர் ஆகியோர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.
சீனவின் Huawei தொழில்நுட்ப நிறுவனத்தின் நிதி நிறைவேற்று அதிகாரி மென் வான்சு கனடாவில் தடுத்து வைக்கப்டபட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் இந்த கனேடியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
எவ்வாறெனினும், இந்த கனேடியர்களை வான்சு விடுதலை செய்யப்பட்டமைக்காக விடுதலை செய்யவில்லை எனவும், அவர்களின் உடல் நிலையை கருத்திற் கொண்டு விடுதலை செய்வதாகவும் சீனா தெரிவித்துள்ளது.