றொரன்டோ நகரில் அதிகளாவன சிறார்கள் கோவிட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைக்கு செல்லும் வயதுடைய அதிகளவான சிறுவர்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
றொரன்டோ நகரில் இன்றைய திகதியில் மொத்த சனத்தொகை பரம்பலில் கூடுதலான கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பாடசாலை செல்லும் வயதுடைய சிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாதம் றொரன்டோவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வாரத்தில் ஒரு லட்சம் பேரில் 64 பாடசாலை செல்லும் சிறார்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இவ்வாறு நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களில் பெரும்பான்மையான சிறார்கள் பாடசாலைகளின் மூலம் நோய்த் தொற்று பரவியவர்கள் அல்ல எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மாறாக வீடுகளில் வைத்து நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.