பழங்குடியின நல்லிணக்கத்திற்காக 30 மில்லியன் டொலர் வழங்கப்படும் என கத்தோலிக்க பேராயர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.
குறிப்பாக வதிவிடப்பாடசாலைகளில் பழங்குடியின சிறார்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்கும் நோக்கில் இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
வதிவிடப்பாடசாலைகளில் துன்புறுத்தல்களுக்கு இலக்காகி இன்னும் உயிருடன் இருப்போர் மற்றும் துன்புறுத்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளது.
ஐந்து ஆண்டு காலப் பகுதிக்குள் இந்த நிதி திரட்டப்பட்டு நல்லிணக்கத் திட்டம் முன்னெடுக்கப்படும் என கத்தோலிக்க பேராயர்கள் தெரிவித்துள்ளனர்.
பழங்குடியின சமூகத்துடன் கலந்தாலோசனை செய்து நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பழங்குடியின சிறார்கள் கனேடிய கத்தோலிக்க வதிவிடப் பாடசாலைகளில் இனச் சுத்திகரிப்பிற்கு உள்ளானதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.