கியூபெக் மாகாணத்தில் சுமார் 17000 சுகாதார பணியாளர்கள் தொழில்களை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத காரணத்தினால் இந்த அபாயம் உருவாகியுள்ளது.
தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் முன்கள சுகாதாரப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் மாதத்திற்குள் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளத் தவறும் பணியாளர்கள் தங்களது தொழில்களை இழக்க நேரிடும் அல்லது பணியிலிருந்து இடைநிறுத்தப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.