சுரங்கத்தில் சிக்கியிருந்த 39 பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒன்றாரியோ சட்பரி பகுதியில் அமைந்துள்ள கனிய சுரங்கமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
Vale ஙஎன்னும் கனிய சுரங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Eduardo Bartolomeo இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்த மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் இன்று அதிகாலை வரையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமார் ஆயிரத்து இருநூறு மீற்றர் ஆழத்தில் சிக்கியிருந்த பணியாளர்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.