Home உலகம் ஜப்பானின் புதிய பிரதமராக Fumio Kishida பதவியேற்கவுள்ளார்

ஜப்பானின் புதிய பிரதமராக Fumio Kishida பதவியேற்கவுள்ளார்

by Jey

ஜப்பானின் புதிய பிரதமராக Fumio Kishida பதவியேற்கவுள்ளார்.

இன்று (29) நடைபெற்ற கட்சி தலைவருக்கான வாக்கெடுப்பில் முன்னாள் வௌிவிவகார அமைச்சர் Kishida வெற்றி பெற்றுள்ளார்.

பிரதமராக பதவி வகிக்கும் Yoshihide Suga, கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

Yoshihide Suga, ஒரு வருடமே பிரதமர் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், ஆளும் கட்சியின் தலைவராக பதவி வகிப்பவரே பிரதமராகவும் பதவி வகிப்பார்.

இதனடிப்படையில், இன்று நடைபெற்ற தேர்தலில் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு நால்வர் போட்டியிட்டனர்.

வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற 64 வயதான Fumio Kishida, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

related posts