அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை இயன்றளவு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, மத்திய வங்கி ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தகர்களும் பொதுமக்களும் எதிர்கொண்டுள்ள சிரமங்களை கருத்திற்கொண்டு பிரதமரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் தீர்வு முன்வைக்கப்படுமென பிரதமர் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.