Home கனடா அல்பர்ட்டா தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழியும் நிலையில்

அல்பர்ட்டா தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழியும் நிலையில்

by Jey

அல்பர்ட்டா மாகாண வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழியும் நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வடக்கு அல்பர்ட்டாவின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் கொள்ளளவு 100 வீதத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவில் போதியளவு வசதிகள் இல்லாத காரணத்தினால் வேறும் மாகாணங்களில் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கோவிட் பெருந்தொற்று காரணமாக அதிகளவு நோயாளிகள் இவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறைந்தளவு தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நோய்த் தொற்றின் தாக்கம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

related posts