ஈக்வடோர் சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
50க்கும் அதிகமான கைதிகள் படுகாயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஈக்வடோரின் குயாஸ் மாகாணத்திலுள்ள சிறைச்சாலையொன்றில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரு தரப்பினருகிடையில் அண்மையில் மோதல் ஏற்பட்டது.
பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் கலக தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 5 மணித்தியாலத்தின் பின் கலவரம் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
அந்நாட்டு வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மோசமான சிறைச்சாலை மோதல் இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈக்வடோர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.