ஒன்றாரியோ மாகாண கல்வித் திட்டத்தில் பழங்குடியின சமூகம் பற்றிய பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.
தரம் ஒன்று முதல் மூன்று வரையிலான மாணவர்களுக்கு இவ்வாறு பழங்குடியின விடயங்கள் பாடமாக கற்பிக்கப்பட உள்ளது.
வதிவிடப்பாடசாலைகள் குறித்த விடயங்களும் கற்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பழங்குடியின சமூகம் தொடர்பான தெளிவினை ஊட்டி சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் வகையில் இவ்வாறு பாடவிதானத்தில் பழங்குடியின விவகாரங்களை உள்ளடக்கத் தீர்மானிக்க்ப்பட்டுள்ளது.