ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் வடமேற்கு கரையோரப்பகுதியில் நில அதிர்வு பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி அனர்த்த எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
கடல் சூழ்ந்த தீவு நாடான ஜப்பான் எரிமலை வலயத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.