Home கனடா போலி கோவிட் சான்றிதழ்கள் குறித்து எச்சரிக்கை

போலி கோவிட் சான்றிதழ்கள் குறித்து எச்சரிக்கை

by Jey

கனடாவில் போலி கோவிட் சன்றிதழ்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகள் கோவிட் சான்றிதழ் என்ற உத்தியைப் பயன்படுத்தி மோசடிகளில்  ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சைபர் குற்றவாளிகள் தனிப்பட்ட தகவல்களை திருடவும், மோசடிகளில் ஈடுபடவும் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில சைபர் குற்றவாளிகள் அரசாங்க தகவல் தளத்தில் உட்பிரவேசித்து சான்றிதழ்களை உள்ளீடு செய்யக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போலி கோவிட் சான்றிதழ்களை வழங்குவதாக இணையத்தில் விளம்பரம் செய்து இவ்வாறு மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

related posts