Home இலங்கை இறக்குமதி குறித்த கட்டுப்பாடுகளில் தளர்வு

இறக்குமதி குறித்த கட்டுப்பாடுகளில் தளர்வு

by Jey

அடுத்த ஆறு மாதங்களுக்கான புதிய பொருளாதார திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வு மத்திய வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தலைமையில் நடைபெற்றது.

நாட்டின் சகல பிரதான பிரிவுகளையும் உள்ளடக்கி பொருளாதார திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களில் பெரு பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் புதிய பொருளாதாரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட 100% வைப்புத் தொகை தேவைப்பாடு இன்று (01) முதல் நீக்கப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

‘பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல்’ வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போதே, ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

related posts