பழங்குடியின சமூகத்துடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றைய தினம் உண்மை மற்றும் நல்லிணக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
உண்மை மற்றும் நல்லிணக்க தினம், பழங்குடியின சமூகத்துடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என போர்ட் தெரிவித்துள்ளார்.
பழங்குடியின சமூகத்தின் பிரச்சினைகளை புரிந்து கொள்வதன் மூலம் அந்த சமூகத்துடனான இடைவெளியை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.