இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாளை மாலை 3 மணி நேரப் பயணமாக யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.
நான்கு நாள் பயணமாக இன்று இலங்கை வருகை தரும் இந்திய வெளி விவகார அமைச்சின் செயலாளர் நாளை யாழ்ப்பாணத்திற்கும் வருகை தரவுள்ளார்.
நாளை மாலை 3 மணிக்கு உலங்கு வானூர்தியில் வருகை தரும் செயலாளர் மாலை 6.30 மணிவரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுக்களிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண ஆளுநர், உள்ளூர் அரசியல்வாதிகள் எனப் பலரையும் சந்திக்கவுள்ளார். இவ்வாறு சந்திப்புக்களின் இறுதியில் யாழில் இந்திய அரசின் நிதியில் கட்டி முடிக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் இருக.கும் கலாச்சார நிலையத்தையும் பார்வையிட்டு அது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரியவருகின்றது.