Home கனடா நல்லிணக்க நிகழ்வில் பங்கேற்காமை குறித்து ட்ரூடே மீது குற்றச்சாட்டு

நல்லிணக்க நிகழ்வில் பங்கேற்காமை குறித்து ட்ரூடே மீது குற்றச்சாட்டு

by Jey

நல்லிணக்க நிகழ்வுகளில் பங்கேற்காமை குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 30ம் திகதி உண்மை மற்றும் நல்லிணக்க தினம் கனடாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

எனினும் இந்த நிகழ்வில் பிரதமர் ட்ரூடே பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லிணக்க நிகழ்வுகளில் பங்குபற்றாது பிரதமர் குடும்பத்துடன் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு சென்று ஓய்வு எடுத்துக் கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறார்கள் வதிவிடப்பாடசாலைகளில் துன்புறுத்தப்பட்ட சம்பவங்களை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்வு கனடா முழுவதும் அனுஸ்டிக்கப்பட்டது.

எனினும், பிரதமர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்காமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

related posts