காலநிலை ஆபத்துக்களை அறியாது கனேடியர்கள் வீடுகளை கொள்வனவுசெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவு வெள்ளம், காட்டுத்தீ போன்ற ஆபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் மக்கள் வீடுகளை கொள்வனவு செய்வதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு வீடுகளை கொள்வனவு செய்வதனால் ஆண்டு தோறும் பல பில்லியன் சேதங்கள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை அபாயங்கள் பற்றி போதியளவு தெளிவு இல்லாத நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.