கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பழங்குடியின சமூகத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பிய பழங்குடியின சமூகத்தினரிடம் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் முதல் தடவையாக அனுஸ்டிக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க தினத்தில் பிரதமர் பங்கேற்கவில்லை.
இந்த சம்பவம் பழங்குடியின சமூகத்தினர் மற்றும் ஏனைய தரப்பினர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பிய பழங்குடியினத் தலைவர் விடுத்த அழைப்பினை பிரதமர் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்ற உண்மை மற்றும் நல்லிணக்க தினத்தில் பங்குபற்றாது, பிரதமர் குடும்பத்துடன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
வதிவிடப்பாடசாலைகளில் பழங்குடியின சிறார்கள் துன்புறுத்தப்பட்டமை நினைவு கூரும் வகையில் இந்த அனுஸ்டிப்பு நடாத்தப்பட்டது.
உண்மை மற்றும் நல்லிணக்க நிகழ்வில் பங்கு பற்றாமைக்காக பிரதமர் ட்ரூடோ பழங்குடியினத் தலைவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.