Home கனடா தொலைபேசியில் மிரட்டியதாக தமிழ் பெண் மீது குற்றச்சாட்டு

தொலைபேசியில் மிரட்டியதாக தமிழ் பெண் மீது குற்றச்சாட்டு

by Jey

தொலைபேசியில் மிரட்டியதாக தமிழ் பெண் ஒருவர் மீது கனேடிய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

றொரன்டோவைச் சேர்ந்த 47 வயதான உமாநந்தினி நிசாந்தன் என்ற பெண் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நபர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியமைக்காக குறித்த பெண்ணை பொலிஸார் கடந்த 1ம் திகதி கைது செய்திருந்தனர்.

மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை தொலைபேசியில் குறித்த பெண் அச்சுறுத்தினார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கென்னடி வீதி மற்றும் எக்லின்டன் வீதி ஆகியனவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறான மத வழிபாட்டு நிகழ்வு நடாத்தப்பட்டது என்பது குறித்த விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

எவ்வாறனினும் குறித்த பெண், மத வழிபாட்டு நிகழ்வில் ஈடுபட்டவரை தொலைபேசியில் கடுயைமாக மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

related posts