Home இந்தியா வங்கிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

வங்கிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

by Jey

விலை மதிப்புள்ள நகை மற்றும் பிற பொருட்களை வைக்க வங்கி லாக்கரில் (Bank Locker) வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. வீட்டில் திருட்டு அல்லது தீ விபத்துள்ள உள்ளிட்ட பிற காரணங்களால், நமது மதிப்புமிக்க பொருட்களை இழக்க வாய்ப்பு உள்ளதால், அது போன்ற விஷயங்களில் இருந்து பாதுகாக்க, பலர் வங்கி லாக்கரில் அதனை வைத்திருக்கும் பழக்கம் உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கி லாக்கர் விதிகளை மாற்றியுள்ளது.

 

ரிசர்வ் வங்கி (RBI) வங்கி லாக்கர்கள் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதலில், லாக்கரை நீண்ட காலத்திற்கு திறக்கவில்லை என்றால், வங்கிகள் லாக்கரை உடைத்து திறக்கலாம் என புதிய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. லாக்கருக்கான வாடகையை முறையாக செலுத்தினாலும், நீண்ட காலம் திறக்கப்படாமல் இருக்கும் லாக்கர்களை திறக்க வங்கிகளுக்கு அனுமதி உண்டு

வங்கி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்கள், வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் வங்கிகள், இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்த கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் திறக்கப்படாமல், செயல்படுத்தப்பட்டாமல் இருக்கும் வங்கி லாக்கர்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது.

திருத்தப்பட்ட ஆர்பிஐ வழிகாட்டுதல்கள் மூலம், நீண்ட நாட்களுக்கு திறக்கப்படாமல் இருக்கும் வங்கி லாக்கரில் உள்ளவற்றை, அதன் நியமனதாரர்/சட்டப்பூர்வ வாரிசுக்கு மாற்றவும் அல்லது பொருட்களை வெளிப்படையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கவும் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லாக்கர் வைத்திருப்பவர் 7 வருட காலத்திற்கு தொடர்பில் இல்லாமல் இருந்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கி லாக்கர் வைத்திருப்பருக்கு, லாக்கரை உடைக்கும் முன் தகவல் அளிக்கப்படும். ஒரு கடிதம் மூலம் அறிவிப்பு அனுப்பப்படும். பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் தொலைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளும் அனுப்பப்படும்

related posts