Home உலகம் வெளிநாடுகளில் சொத்துகளை பதுக்கிய 300 இந்திய பிரபலங்கள்

வெளிநாடுகளில் சொத்துகளை பதுக்கிய 300 இந்திய பிரபலங்கள்

by Jey

அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரும் வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகப் பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்புவெளியிட்டிருக்கிறது. 117-நாடுகளை சேர்ந்த 150 ஊடக நிறுவனங்களின் 600 பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பான (ICIJ) வெளியிட்ட இந்த பட்டியல் சர்வதேச அளவில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

`பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அந்தப் பட்டியலில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி மற்றும் நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

வரி ஏய்ப்பைப் பிரதானமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இந்தப் பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் பாப் இசை பாடகி ஷகிரா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாளிகைகள், பிரத்யேக கடற்கரை முகப்பு சொத்து, படகுகள் போன்றவற்றில் முதலீடு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஆப்பிரிக்காவின் சீஷெல் தீவு, ஹாங்காங் மற்றும் மத்திய அமெரிக்காவின் பெலிஸ் உள்ளிட்ட கடல்சார் தீவுகளை தங்கள் புகலிடமாகப் பயன்படுத்தி கொண்டு சட்டவிரோதமாக முதலீடுகள் செய்து, வரிஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

related posts