Home கனடா காணாமல் போன பழங்குடியின பெண்களுக்கு நியாயம் வழங்குமாறு கோரிக்கை

காணாமல் போன பழங்குடியின பெண்களுக்கு நியாயம் வழங்குமாறு கோரிக்கை

by Jey

காணமால் போன, கொலை செய்யப்பட்ட பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுமியருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன, கொலை செய்யப்பட்ட சிறுமியர் மற்றும் பெண்களை நினைவு கூரும் நிகழ்வுகள் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயிரக் கணக்கான பெண்கள் மற்றும் சிறுமியர் இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன் கொலையுண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1980ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் 1017 பழங்குடியின பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண கனேடிய பெண்களை விடவும் பழங்குடியின பெண்கள் கொலை செய்யப்படும் சந்தர்ப்பம் 12 தடவைகள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

பழங்குடியின பெண்கள் சிறுமியருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென மக்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.

related posts