தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைமற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பனவற்றை ஒத்தி வைக்க நேரிடும் என கல்வி மறுசீரமைப்பு, பல்கலைக்கழக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சை நடாத்துவது குறித்து கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் விரைவில் விளக்கம் அளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு பரீட்சைகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய வாய்மொழி மூல கேள்விக்கு நாடாளுமன்றில் இன்று பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.