வெடிபொருள் எச்சரிக்கையை காரணமாக மூடப்பட்டிருந்த அம்பாசெடர் பாலம் மீளவும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் வின்ட்சோரில் அமைந்துள்ள அம்பாசெடர் பாலம் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியாக அமைந்துள்ளது.
பாலம் அமைந்துள்ள பகுதியில் வெடிபொருட்கள் இருக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக பாலம் மூன்று மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை கனேடிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வெடிபொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை வாகனமொன்றிலிருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.