Home கனடா தேர்தல் தோல்வியின் பின்னர் முதல் தடவையாக  கட்சி உறுப்பினர்களை சந்திக்கும் O’Toole

தேர்தல் தோல்வியின் பின்னர் முதல் தடவையாக  கட்சி உறுப்பினர்களை சந்திக்கும் O’Toole

by Jey

தேர்தல் தோல்வியன் பின்னர் முதல் தடவையாக கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் Erin O’Toole, கட்சி  உறுப்பினர்களை முதல் தடவையாக சந்திக்கின்றார்.

ஒட்டாவாவில் முதல் தடவையாக கட்சியின் 119 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று கூட உள்ளனர்.

கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்வதா இல்லையா என்பது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடல் நடாத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமாயின் குறைந்தபட்சம் 20 வீதமான உறுப்பினர்கள் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட ஆசனங்களை விடவும் இந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 2 ஆசனங்கள் குறைவாகவே பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

related posts