மலையாளத்தில் வெளியான ‘மகேசிண்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். இவர் தமிழில் சசி இயக்கத்தில் 2019ல் வெளியான,‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில், ஜி வி பிரகாஷின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிலீசான ‘தீதும் நன்றும்’ என்ற படத்திலும் நடித்தார். மேலும், சூர்யா நடிப்பில் ஓ.டி.டி தளத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘ஜெய் பீம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் திடீரென்று திருமணம் செய்து கொண்டார்.இவர் அருண் ஆண்டனி ஓனிசேரில் என்னும் நபரை நேற்று கரம் பிடித்தார். இவர்களுடைய திருமண செய்தி இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக தான் திரையுலகினருக்கே தெரிய வந்துள்ளது. திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இவர்களுடைய திருமணம் கடந்த 5-ம் தேதி கேரளாவின் வயநாட்டில் வைத்து கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து அவருக்கு சமூக வலை தளங்களில் நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.