Home கனடா லிபரல் கட்சியின் ஆசன எண்ணிக்கை 160 ஆக உயர்வு

லிபரல் கட்சியின் ஆசன எண்ணிக்கை 160 ஆக உயர்வு

by Jey

லிபரல் கட்சியின் ஆசன எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் ஆசன எண்ணிக்கை 159 ஆக காணப்பட்டது, ஒரு தொகுதியில் மீள வாக்கு எண்ணப்பட்டது.

மீள வாக்குகள் எண்ணப்பட்டதில் Brenda Shanahan  என்ற லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றியீட்டியுள்ளதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தின் Chateauguay-Lacolle  தொகுதியில் போட்டியிட்ட Brenda Shanahan  முன்னதாக தோல்வியடைந்தார் என அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் Patrick O’Hara 286 வாக்குகளினால் வெற்றியீட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

மீளவும் வாக்குகள் எண்ணப்பட்ட போது 12 வாக்குகளினால் Brenda Shanahan  வெற்றியீட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts