Home உலகம் அமெரிக்காவை நீண்ட நாட்களாக சீனா மதிப்பதில்லை

அமெரிக்காவை நீண்ட நாட்களாக சீனா மதிப்பதில்லை

by Jey

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த பைடன் வெற்றி பெற்றார். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு எழுப்பினார்.

எனினும், பெருவாரியான வாக்குகளை பெற்ற பைடன் அதிபராக முறைப்படி தேர்வானார். இந்த நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதுடன், பலவீன மற்றும் ஊழல் நிறைந்த தலைமையை கொண்ட அரசு அமெரிக்காவில் நடக்கிறது என பைடனை சாடியுள்ளார்.

தொடர்ந்து டிரம்ப் கூறும்போது, அமெரிக்காவை நீண்ட நாட்களாக சீனா மதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். தைவான் அருகே, சீன விமானப்படை எண்ணற்ற போர் பயிற்சிகளை மேற்கொண்டது.

இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை தணிக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உயரதிகாரிகள் இடையே சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த சூழலில், முன்னாள் அதிபர் டிரம்ப், சீனாவுடன் அமெரிக்கா போர் தொடுப்பதில் சென்று முடியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

related posts