பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் நடவடிக்கைக்கு பழங்குடியின சமூகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
காம்ப்லூப்ஸ் பழங்குடியின சமூகம் இவ்வாறு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
வதிவிடப் பாடசாலைகளில் பழங்குடியின சிறார்கள் துன்புறுத்தப்பட்டமையை நினைவு கூறும் வகையில் அறிவிக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க நிகழ்வில் பிரதமர் பங்குபற்றவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் பிரதமர் அதற்கு பதிலளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் இந்த செயற்பாடு பழங்குடியின சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலானது என தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் காம்ப்லூப்ஸ் பழங்குடியின சமூகம் பிரதமரின் நடவடிக்கையை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
வரலாற்றுத் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு ட்ரூடோ தனிப்பட்ட ரீதியில் எவ்வளவு கரிசனை காட்டுகின்றார் என்பது அவரின் செயற்பாடு மூலம் அம்பலமாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.